Tuesday, March 9, 2021

மார்ச் 10, Osama bin Laden பிறந்த தினம்.

💁  வெள்ளை  உலகின் தொல்லை  தலைவன் "பின் லேடன்"

உலகில் பல தீவிரவாதிகளை உற்பத்தி செய்த, ஒரு முதல் தீவிரவாதி, உற்பத்தியான தினம் இன்று. ஆம், உலகை நடுங்க வைத்த ஒசாமா பின் லேடன் பிறந்த தினம் இன்று. இஸ்லாம் என்றொரு உன்னத மதத்தில் பிறந்த ஒஸாமாவுக்கு, ஏன் இந்த மட்டமான  "தீவிரவாதம்" சிந்தனை? அமெரிக்காவை  ஏன் இவன் தர்க்க வேண்டும்? கடைசி நாளில் நடந்தது என்ன? போன்ற சில முக்கியமான நிகழ்வுகளை தான் இந்த பதிவில் பார்க்கப் போகிறோம்.


ஒசாமாவின் பிறப்பே விசித்திரம் நிறைந்தது. துபாயில் பெரும் கோடீஸ்வரருக்கு கிட்டத் தட்ட 52 பிள்ளைகள் பிறக்கின்றனர். அப்படியென்றால் ஒசாமாவின் அப்பாவிற்கு என்ன தான் வேலை என்ற கேள்வி எழலாம். அனைத்தும் ஒரே மனைவிக்கு பிறக்க வாய்ப்பில்லை என்பது நான் சொல்லி தெரியவேண்டிய அவசியமில்லை. அப்படி பிறந்த 52 பேரில், 17வது மகனாக பிறந்தவன் தான் இந்த ஒசாமா. ஆம், 1957 ஆம் ஆண்டு மார்ச் 10-ஆம் தேதி பிறக்கிறான்.

அப்பா எட்டடி பாய்ந்தால் மகன் 16 அடி பாய்வான், அப்பனுக்கு பிள்ளை தப்பாமல் பிறந்திருக்கிறது, என்பதெல்லாம் தமிழ் பழமொழி மட்டுமல்ல. உலக முது மொழி. ஒசாமாவின் அப்பா தீவிரவாத இயக்கத்தை ஆதரித்து கோடிக்கணக்கான சொத்துக்களை கிள்ளி கொடுக்காமல் அள்ளி கொடுக்கிறார். அதே நேரத்தில் அமெரிக்காவை அழிக்க முற்படுகிறார். இதை பார்த்து வளர்ந்ததாலவோ என்னவோ, ஒசாமாவின் சிந்தனையும் நாளுக்கு நாள் அதை நோக்கியே நகர்கிறது.

 

தனது 41-வது வயதில் தனது அப்பாவிடம் இருந்து விடைபெற்று, அதாவது 1998-ஆம் ஆண்டில் “அல்-கொய்தா” என்ற அதி தீவிரமான, தீவிரவாத  இயக்கத்தை தொடங்குகிறான். பல இளைஞர்களை அதில் பயிற்சி கொடுத்து இனைக்கிறான். நாளுக்கு நாள் அவனது இந்த இயக்கம் வெளி உலகுக்கு தெரிய வருகிறது. தனது தந்தையின் என்னமான அமெரிக்காவை குறி வைக்கிறான்.

 

அதற்கு நாள் குறிக்கிறான். செப்டம்பர் 11, 2001 ஆம் ஆண்டு, உலகின் மிகப்பெரிய நாடான அமெரிக்கா இவனின் இந்த படுபாதக செயலை எண்ணி கூட பார்த்து இருக்காது. பல நாள் உளவு பார்க்கிறான். எந்த இடம் அமெரிக்காவின் மைய புள்ளி, எதை தகர்த்தால், அமெரிக்காவின் இதயம் சுக்கு நூறாக நொறுங்கும்?. எதை தொட்டால், அது மீண்டு எழ பல ஆண்டுகள் ஆகும்? என, கத்தி பட பணியில் ஸ்கெட்ச் போடுகிறான்.

அதன் படி 2001, செப்டம்பர் 11 அன்று, யாரும் எதிர் பார்க்காத நேரத்தில் உலக வர்த்தக மைய்யத்தை மனித வெடிகுண்டு மூலம் முதலில் தகர்க்கிறான். அந்த பரபரப்பும், அபயக் குரல் அடங்கும் முன்பே, அடுத்தது வேறு திசை நோக்கி தனது எண்ணத்தை விதைக்கிறான். இம்முறை அவன் தொட்டதும் சுட்டதும் பெண்டகன். அதாவது ராணுவ தலைமையிடம். கண்ணிமைக்கும் நேரத்தில் அனைத்தையும் முடித்து விட்டு, மீண்டும் பதுங்கி கொள்கிறான். சற்று நேரத்தில், இந்த தாக்குதலுக்கு அல்-கொய்தா அமைப்பு பொறுப்பேற்கிறது என்று அறிக்கை விட்டான்

 

அன்று முதல் அமெரிக்காவின் மிகப்பெரிய கோபாக்கினைக்கு உள்ளாகிறான். இஸ்லாமாபாத், பாகிஸ்தான் என வலை வீசி தேடுகின்றனர். ஒரு கட்டத்தில் அப்போதைய ஜனாதிபதியான ஜார்ஜ் W புஷ் அவர்களிடம் நிருபர்கள் கேட்கின்றனர். ஒசாமாவை வீழ்த்த முடியுமா என்று? ஆனால் அவன் உயிருன் வேண்டும் என்கிறார் புஷ்.

 

கிட்டத்தட்ட 10 வருட தேடுதல் வேட்டைக்கு பிறகு, கராச்சியில் உள்ள ஒரு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருவதாக அமேரிக்கா உளவுத் துறைக்கு தகவல் பறக்கிறது. விடுவார்களா? எதற்கு இத்தனை நாள் காத்துக்கிடந்தோமோ அதுவே கைக்கு கிடைத்தால் விடுவோமா? என்கிற அளவில், தனது படைகளுடன் கராச்சி விரைகிறது அமரிக்க ராணுவம். கண்ணிமைக்கும் நேரத்தில் சல்லடை போட்டு சலித்து, அள்ளி முடிந்து எடுத்து சென்றது ஒசாமாவின் உடலை....

 

அத்தோடு அவனது சகாப்தம் முடிவுக்கு வருகிறது. ஆனால், முன்னதாக ஒரு கோடீஸ்வர குடும்பத்தில் பிறந்த ஒசாமா, தனது நுண்ணறிவால் நேர்மையான முறையில் செயல் பட்டிருக்கலாம். ஆனால், “பட்டயத்தை எடுத்தவன் இறுதியில் பட்டயத்தால் தான் மடிவான்” என்ற சொல்லுக்கேற்ப, எந்த ஆயுதத்தை கையில் எடுத்தானோ, அதே ஆயுதத்தால் வீழ்த்தப்பட்டது தான் காலத்தின் கட்டாயம்.

 

இந்தியாவை ஆண்ட குரு நில மன்னர்கள் எப்படி சில பல, சமஸ்தானங்களை சமயம் கிடைக்கும் போது தங்களுடன் இணைத்துக் கொண்டார்களோ, அப்படி தான் ஒஸாமாவும், ஏமன், எத்தியோப்பியா போன்ற உலக நாடுகளில் உள்ள சிறு சிறு தீவிரவாத இயக்கங்களை, தனது இயக்கத்துடன் இணைத்துக் கொண்டு மார் தட்டினான். வர மறுப்பவர்களை மிரட்டினான். பண பலம், ஆள் பலம் என தன் வாழ் நாளில் பெரும் செல்வாக்கோடு வலம் வந்தான். ஆனால், இறுதியில் முடிவு வேறு மாதிரி மாறி விட்டது.

 

உலகின் பெரும் தீவிரவாதியாக ஒசாமாவின் மரணம், பிற தீவிரவாத இயக்கங்களுக்கு, இந்த சம்பவம் பெரும் படிப்பினையை கொடுத்தது. இப்போதும் உலகம் முழுவதும் தீவிரவாதம் இருக்கிறது என்றாலும், முன்பு இருந்த அளவை விட குறைந்துள்ளது என்பதே நிதர்சனமான நிஜம்.

 

||| இறுதியாக, ஒரு பாடல் வரிகள் நினைவுக்கு வருகிறது. "வெள்ளை பூக்கள் உலகம் எல்லாம் பரவட்டும்".!!! அமைதி நிலவட்டும்!!!


No comments:

Post a Comment

சென்று வாருங்கள் எஸ்.பி.ஜனநாதன்!!!

💁 யார் இந்த இயக்குனர் எஸ் பி ஜனநாதன்? பண்பாட்டிற்கும், கலாசாரத்திற்கும் பெயர் பெற்ற, நெற்களஞ்சியம் இருக்கும் புகழ்பெற்ற தஞ்சாவூர் மாவட்டத்த...