Sunday, March 14, 2021

சென்று வாருங்கள் எஸ்.பி.ஜனநாதன்!!!

💁 யார் இந்த இயக்குனர் எஸ் பி ஜனநாதன்?

பண்பாட்டிற்கும், கலாசாரத்திற்கும் பெயர் பெற்ற, நெற்களஞ்சியம் இருக்கும் புகழ்பெற்ற தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள வடசேரி கிராமத்தில் பிறந்தவர் தான் இயக்குனர் எஸ் பி ஜனநாதன். 


தமிழ் சினிமாவில் ஆகச்சிறந்த படத்தொகுப்பாளராக லெனின், இயக்குனர் பரதன் ஆகியோரிடம் உதவி இயக்குனராக இருந்து, சினிமாவைக் கற்றுக் கொண்டு, பயணிக்க ஆரம்பித்தவர் தான் இயக்குனர் எஸ் பி ஜனநாதன்.


முதல் படத்தில் தேசிய விருதை பெறுவது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. ஒன்று வலுவான கதை இருக்க வேண்டும். அல்லது நடிகர்களின் அழுத்தம் திருத்தமான நடிப்பு இருக்க வேண்டும். என்னதான் இருந்தாலும் கதையில் சிறிது தடுமாற்றம் இருந்தாலும், அந்தப் படம் பார்க்கப்படுமே தவிர திரும்பிப்பார்க்க படுவதில்லை. 


அப்படி ஜனநாதன் இயக்கத்தில் வெளிவந்த முதல் திரைப்படம் தான் "இயற்கை". "வெண்ணிற இரவுகள்" என்கிற ஆங்கில நாவலை தழுவி உருவான திரைப்படம் தான் "இயற்கை". தமிழ் சினிமா ரசிகர்களுக்கு இதுவரை கண்டிராத பல காட்சிகள் பல திருப்பு முனைகளை அமைந்த கதைகள் படத்தில் இடம்பெற்றது. 
வித்யாசமான கடல் காதலை வெளிப்படுத்திய இத்திரை படம், பின்னாளில் இவருக்கு தேசிய பெற்றுத் தந்தது. ரசிகர்கள் படத்தை வெள்ளிவிழா வரை கொண்டு சென்று, சலிக்கும் வரை கொண்டாடி தீர்த்தனர், என்றே சொல்ல வேண்டும். 


தன் படங்களில் எளிய மக்களுக்கான அரசியலை சாட்டையடியாக தருவதில் கைதேர்ந்தவர் எஸ்பி ஜனநாதன். அப்படி அவர் பல நல்ல விஷயங்களை சினிமாவில் தொடர்ந்து கொடுத்தார். 


அதற்கு ஆக சிறந்த உதாரணம்  ஈ, பேராண்மை, புறம்போக்கு என்கிற பொதுவுடமை, ஆகிய படங்கள் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு புதுவிதமான ஒரு அனுபவத்தை தந்தது ஜெயம் ரவி நடிப்பில் உருவான பூலோகம் படத்தில் தன் சாட்டையடி வசனங்கள் மூலமாக கார்ப்பரேட் அரசியலை கடுமையாக சாடினார். 


"லாபம்" படத்தை எடுத்து வெளியிடுவதற்கான அனைத்து முயற்சிகளிலும் ஈடுபட்டு கொண்டிருக்கும் போதுதான், சிறிது உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, இப்போது இம் மண்ணை விட்டு மறைந்து விட்டார். 


எஸ்பி ஜனநாதனுக்கு ஒரு கனவு இருந்ததாக, தனது நண்பர்களிடம் சொல்லிக் கொண்டே வந்திருக்கிறார்... தஞ்சை பெரிய கோவிலை மையமாக வைத்து ஒரு கனவு திரை படத்தை எடுக்க  திட்டம் தீட்டி இருந்தார். அது முடியாமல் போய்விட்டது. 


அதனால் என்ன? அவருடைய பட்டறையில் உருவாகிக் கொண்டிருக்கும் இளம் இயக்குனர்கள், அவரது கனவு திரைப்படத்தை உருவாக்கி, அவரது ஆன்மா சாந்தி அடைய முயற்சிப்பார்கள் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. 


தமிழ் சினிமாவில் ஒரு வருடத்தில் பல படங்களை எடுக்கும் இயக்குநர்களுக்கு மத்தியில், ஒரு வருடத்தில் 5 படங்களுக்கும் மேல் நடிக்கும் நடிகர்களுக்கு மத்தியில், 18 வருடங்களாக சினிமாவில் இயங்கி, மக்களுக்கு தேவையான விஷயங்களை மையமாக வைத்து, வெறும் ஆறு படங்கள் மட்டுமே எடுக்கும் போதே தெரிகிறது, எஸ்பி ஜனநாதன் ஓர் உன்னத ரசனைக்காரன் என்பது... 


எல்லா தடைகளையும் தாண்டி, எல்லைகளையும் மீறி, சொற்பமான விரல் விட்டு எண்ணக் கூடிய படங்களை மட்டுமே தந்த எஸ் பி ஜனநாதன், காலம் கடந்து தமிழ் சினிமா கொண்டாட பட வேண்டிய ஒரு பொக்கிஷம். 


| 💖 செயற்கை உலகில் செயல்பட்டது போதும். இயற்கையோடு இயைந்து வாழுங்கள் எஸ்பி ஜனநாதன் அவர்களே.... 💖 |

No comments:

Post a Comment

சென்று வாருங்கள் எஸ்.பி.ஜனநாதன்!!!

💁 யார் இந்த இயக்குனர் எஸ் பி ஜனநாதன்? பண்பாட்டிற்கும், கலாசாரத்திற்கும் பெயர் பெற்ற, நெற்களஞ்சியம் இருக்கும் புகழ்பெற்ற தஞ்சாவூர் மாவட்டத்த...