Monday, March 8, 2021

Harry & Meghan | பிரிட்டிஷ் தம்பதியால் பரபரப்பு!

 Harry & Meghan | இனவெறியால் ஒதுக்கப்பட்டனரா?

காதலுக்கு கண் இல்லை என்பதை, பல்வேறு தருணங்களில் பல்வேறு சம்பவங்கள் நமக்கு உணர்த்திக் கொண்டே இருக்கின்றன.  காதலுக்கு இதுதான் எல்லை என எதையும் வரையறுத்து, நிலைநிறுத்தி கொள்ள முடியாது. அப்படித்தான் இங்கிலாந்தை சேர்ந்த அரச குடும்பத்தின் புதல்வன் ஹாரி மற்றும் நீல வண்ண படங்களில் நடித்து புகழ்பெற்ற மேகன் தம்பதியின் காதல்.

ஹரியும் மேகனும் காதலித்து கடந்த 2018-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். தனிப்பட்ட முறையில் எங்கோ ஒரு மூலையில் வைத்து இவர்களின் திருமணம் நடக்கவில்லை... அரச குடும்பத்தின் உறுப்பினர்கள் முன்னிலையில் அவர்களின் சம்மதத்தோடு திருமணம் நடந்து முடிந்தது.  

 

திருமணம் முடிந்து தம்பதிகள் மகிழ்ச்சியாய் தங்களது வாழ்க்கையை அரச மாளிகையில் வாழத் தொடங்கும்போது, அங்கே தான் பிரச்சனை வெடிக்கிறது.

 

இதற்கு இடைப்பட்ட தூரத்தில், Haari மற்றும் மேகன் தம்பதிக்கு, அழகான ஆண் குழந்தை பிறக்கிறது. பிறகு நாட்கள் ஆக ஆக, தான் ஒரு அரச குடும்பத்தை சேர்ந்தவர் என்பதை மறக்கும் எண்ணம் அதிகரித்தது ஹாரிக்கு... அடுத்தடுத்த நாட்களில் இளவரசர் ஹாரி குடும்பத்தில் இருந்தே புறக்கணிக்கப் படுகிறார். தனது பாதுகாப்புக்கு தானே தொகையை செலவிடும் நிலை ஏற்படுகிறது.

 

இவர், தனது அப்பா சார்லஸ் அவர்களுக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டாலும், அவர் போனை எடுப்பது இல்லை. பல்வேறு வித அழுத்தம் காரணமாக, இளவரசர் ஹாரி அரச குடும்பத்தில் இருந்து விலகுவதாக சமீபத்தில் அறிவித்தார்.

இங்கிலாந்தில், அதுவும் அரசு குடும்பத்தில் என்ன நடக்கிறது என்று ஊடகங்கள் பல்வேறு வகையில் கேள்விகள் எழுப்பத் தொடங்கினர். அந் நாட்டின் இளவரசர் ஹரிக்கு பாதுகாப்பு இல்லை எனும்போது, நாட்டு மக்களுக்கு எப்படி பாதுகாப்பை ஏற்படுத்தி தர முடியும் என்று ஊடகங்கள் கொந்தளிக்க தொடங்கின. எதையும் கண்டுகொள்ளாமல் அங்கிருந்து வெளியேறி விட்டனர் ஹரி & மேகன் தம்பதி.

 

தற்போது ஒரு தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டியில் இருவரும் கூட்டாக சேர்ந்து பல்வேறு திடுக்கிடும் உண்மைகளை அம்பலப்படுத்தினார்... அதில் தான் பிரசவிக்க போகும் குழந்தை, கருப்பு இன குழந்தையாக இருக்கும் என்று அரச குடும்பத்தினர் மிகவும் கவலை பட்டதாகவும், அவர்கள் கொடுத்த அழுத்தம் தன்னை தற்கொலையின் எல்லைக்கே தூக்கி சென்றதாகவும், கடும் வார்த்தைகளை கொட்டியுள்ளார்.

 

ஹரி & மேகன் தம்பதி, தனது ஆண் குழந்தையுடன் தற்போது கலிபோர்னியாவில் வசித்து வருகின்றனர். அரச குடும்பத்தை சார்ந்த இவர்களுக்கே இந்த ஒரு நிலை என்று பத்திரிக்கைகள் அதிக அளவில் விமர்சனம் செய்யத் தொடங்கியுள்ளது. ஆனால், இதற்கு இங்கிலாந்தை சேர்ந்த அரசர் குடும்பம் எதுவும் பேசாமல் மவுனம் காத்து வருகின்றனர்.

 

காதலுக்கு ஆதரவு தெரிவித்து, சமீபத்தில் உலக அளவில் காதலர் தினத்தை கொண்டாடி முடித்து இன்னும் ஒரு மாதம் கூட ஆகாத நிலையில், ஒரு பெரும் அரச குடும்பத்தை சேர்ந்த வாரிசு தம்பதிக்கு, இப்படி ஒரு காதல் எதிர்ப்பு நிலை எனும்போது, இவ்வுலகத்தில் கண்ணுக்குத் தெரியாமல் எத்தனை காதல் எதிர்ப்புகள் தொடர்ந்து அரங்கேற்றம் ஆகிக்கொண்டு வருகிறதோ என்ற ஐயம் வெளிப்படுகிறது. 


உலக நாடுகளை ஆரம்ப காலத்தில் ஆட்டிப்படைத்து சர்வாதிகாரம் செய்த பிரிட்டிஷ் அரசாங்கத்தை, தற்போது மீடியாக்கள் கேள்விகள் கேட்டு துளைத்து ஆட்டிப்படைத்து வருவது தான் காலத்தின் விளையாட்டு!!!

No comments:

Post a Comment

சென்று வாருங்கள் எஸ்.பி.ஜனநாதன்!!!

💁 யார் இந்த இயக்குனர் எஸ் பி ஜனநாதன்? பண்பாட்டிற்கும், கலாசாரத்திற்கும் பெயர் பெற்ற, நெற்களஞ்சியம் இருக்கும் புகழ்பெற்ற தஞ்சாவூர் மாவட்டத்த...