💁 “மைலோ” என்றொரு மாமனிதன்!!!
இந்த சாக்லேட் மைலோ இருக்கட்டும். ஆனால், பண்டைய கிரேக்க நாட்டில் ஒரு “மைலோ” இருந்தார். மிக சிறந்த மல்யுத்த வீரர். “மிகச்சிறந்த” என்ற வார்த்தையை நான் இங்கே குறிப்பிட காரணம், தொடர்ந்து 6 முறை ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கத்தை தட்டி சென்றவர்.
ஒரு ஒரு முறையும் இந்த மைலோ களமிறங்கும் போது, இவருடைய மல்யுத்தத்தை பார்ப்பதற்காகவே மைதானத்தில் கூட்டம் அள்ளுமாம். பரபரப்பாக தொடங்கும் போட்டியின் இறுதியில், வழக்கம் போல மைலோ தான் வெற்றியாளராக அறிவிக்கப்படுவார்.
நம் இந்தியாவை சேர்ந்த சுஷில் குமார் அவர்களும் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்று, மல்யுத்தத்தில் பதக்கத்தை பெற்று தந்தது நினைவு இருக்கலாம். சரி, இங்கே நான் குறிப்பிட வந்த விஷயமே வேறு. பொதுவாகவே மல்யுத்த போட்டிகளுக்கு நல்ல திடகாத்திரமான உடல் இருக்க வேண்டும் என்பார்கள்.
இந்த மைலோ தனது இளம் வயதில், ஒரு கன்று குட்டியை தூக்கி தோள் மேல் வைத்துக் கொண்டு, வெகு தூரம் நடப்பாராம். என்ன இவன் பைத்தியக்காரனாய் இருக்கிறானே. கன்று குட்டியை யாராச்சும் இப்படி தூக்குவார்களா? என கிராம மக்கள் கேலி பேசுவார்களாம். வேண்டும் என்றால் நீங்களும் உங்கள் வீட்டு கன்று குட்டியை தூக்கி கொண்டு நடங்க என சிரித்து கொண்டே பதில் சொல்லுவாராம் மைலோ.
சிலர் கன்று குட்டி தானே, ஈஸியாய் தூக்கி விடலாம் என நினைப்பது சரிதான். ஆனால், இங்கு தான் மைலோ சற்று மாறுபட்டு நிற்கிறார்.
கன்று குட்டியாய் இருக்கும் போதே தூக்கி பழகி கொண்ட இந்த மனிதனுக்கு, அது வளர வளர அதன் எடை கூட கூட தூக்குவது அப்படி ஒன்றும் பெரிதாக படவில்லை.
இப்படியே தினம் தினம் தூக்கினதால், அந்த கன்று நன்றாக வளர்ந்து காளை மாடாக மாறிய
பிறகும் அதனை அசால்ட்டாக தூக்கினார் மைலோ.
புதிதாய் அவரை கவனிக்கும் அனைவருக்கும் ஒரே ஆச்சர்யம். எப்படி மைலோ மட்டும் இவ்வளவு பெரிய காளை மாட்டை அசால்ட்டாக தூக்குகிறார் என்று....
அது கன்று குட்டியாக இருக்கும் போதே தூக்கி பழகியவர், அதை வைத்து தினம் தினம் சில பயிற்சிகளையே செய்திருக்கிறார். முன்பு கேலி பேசியவர்கள் பின்பு அவரை புகழ்ந்து பேச ஆரம்பித்தனர்.
தொடர்ந்து 6 முறை பதக்கம் வாங்க எப்படி முடிகிறது மைலோ? என்று நிருபர்கள் கேட்க, அந்த கன்று காளையான கதையை அவிழ்த்து விடுகிறார். அனைவருக்கும் ஆச்சர்யம். முயற்சியும், பயிற்சியும் அப்படி இருக்க வேண்டும். ஒரு நாள் செய்து விட்டு விடுவதல்ல முயற்சி. அது தினம் தினம் செய்ய கூடிய பயிற்சியாக இருக்க வேண்டும் என்று சொல்லி, அடுத்த பதக்கத்துக்கு தயாராக சென்றாராம் மைலோ.
"மைலோ" - வெறும் இரண்டெழுத்து வார்த்தை அல்ல. மல்யுத்தத்தில், அவன் பண்டைய கிரேக்க நாட்டின் அடையாளம்.

Fantastic...
ReplyDeleteFantastic...
ReplyDelete