💁 நாசர் என்றொரு மா நடிகன்
"அவதாரம்" படத்திற்காக பாடல் இசை அமைக்க, நாசர் இளையராஜா அவர்களிடம் செல்கிறார்... "சார் ஒரு படம் பண்றேன். நீங்க தான் இசையமைக்காணும்",அப்படின்னு சொல்ல, அதற்கு இளையராஜா "யோவ் நீ தான் மாசத்துக்கு நாலு படம் பண்ணிட்டு இருக்க, இப்போ போயிட்டு எதுக்குய்யா படம் எடுக்கற" என்கிறார்.
இல்ல சார் அது வந்து....... எடுக்கணும்னு தோன்றும் போது எடுத்துடனும் இல்லையா? அதுதான், அப்படின்னு சொல்கிறார். ஓ, அறிவாளின்னு நினைப்பா? சரி சரி..... போயிட்டு வேற ஏதாச்சும் வேலை இருந்தா முடிச்சுட்டு வா என்று இளையராஜா நாசரை அனுப்பி வைக்கிறார்.நாலு மணிக்கு இளையராஜா அவர்களின் ஸ்டுடியோவிற்கு நாசர் செல்கிறார். அவரது ஸ்டூடியோவில் இளையராஜா, கருப்பு வெள்ளை 3D Animation மாதிரி அமர்ந்து கொண்டு இருக்கிறார்.
அப்போது, அந்த கலைக்கூடம் அமைதியாய் இருக்கிறது... சில நிமிடம் கழித்து ஒரு சாக்லேட்டை தூக்கி போடுகிறார் நாசரிடம்... அதை பிடித்துக் கொண்டு அமைதியாக அமர்ந்து இருக்கிறார். இளையராஜா எதையோ வேக வேகமா எழுதுகிறார். நாசருக்கு தெரியவில்லை, என்ன எழுதுகிறார் என்று... ஆனால் வேகவேகமாக எழுதுகிறார்.
சரி ஏதோ முக்கியமான வேலையாய் இருக்கிறார் என்று அவரும் அமர்ந்து கொண்டு இருக்கிறார். எழுதி முடித்தவுடன், பொறுமையாக புரூ என்கிறார். புருஷோத்தமன் என்கிற புரூ வருகிறார். அந்த பேப்பரை கொடுத்து விட்டு, இந்தப் பக்கம் திரும்புகிறார்...
அப்பாடா அவர் வேலை முடிந்து விட்டது. இப்பொழுது என் வேலைக்கு வருகிறார், என மனதுக்குள் நினைத்து கொண்டு நாசர் கேட்கிறார்.... சார் பாடல் இசையமைப்பது பத்தி கேட்டு இருந்தேன் என்கிறார். உடனே இளையராஜா அதுதான் போய்விட்டதே, "எது போய் விட்டது" என நாசர் கேட்க, அதான்யா அந்த ஷீட் போயிருச்சு. நீ போயிட்டு எல்லா வேலையும் முடிச்சுட்டு, நாலு மணிக்கு வா. Composing நாலு மணிக்கு அப்படின்னு சொல்கிறார்.
மீண்டும் நாலு மணிக்கு போகும் பொழுது, திருவிழாக்கோலம் போல, இசைக்கலைஞர்கள் "டம் டும் டம் சவுண்ட்" உடன் வாசித்துக் கொண்டிருக்கிறார்கள்... அப்போது இளையராஜா, புரூ என்று சப்தமாக கூப்பிடுகிறார்.1,,2,3...... 1,2,3,........1...2....3..... என்ற உடனே, கோரசாக "தான தந்தம் தான தந்தம்" என குழுவினர் பாட ஆரம்பித்தார்கள். உண்மையில் புல்லரித்து விட்டது போலும். தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்துவிட்டார் நாசர்.
அப்படி பிறந்ததுதான், "அவதாரம்" படத்தில் இடம் பெற்ற, நம்மை எல்லாம் இன்னமும் தாலாட்டிக் கொண்டிருக்கும், "தென்றல் வந்து தீண்டும் போது" என்ற பாடல்....
ஒரு நடிகனாய், கதாபாத்திரங்களை கிரகித்துக்கொள்ளும் தனித்துவம் பெற்ற ஒரு கலஞனாய், பேச்சாளனாய், கதாசிரியராய், இயக்குனராய், திரையுலகில் தன்னை நிலை நிறுத்திக் கொண்ட, மாபெரும் ஒப்பற்ற கலைஞன் நடிகர் 'நாசர்" பிறந்த தினம் இன்று....
இன்னும் அவருக்கு சரியான படங்கள் கதாபாத்திரங்கள் அமைந்தால் சிறப்பாக செயல்படுவார் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் திரு நாசர் சார் அவர்களே!!!!

