https://spiritualsidha.blogspot.com/2021/03/salt-sugar.html
https://ajfstudio1.blogspot.com/2021/03/medical.html
எண்ணத்தில் உதித்தவைகளையும், வரலாற்றில் சாதித்தவர்களையும் பற்றி பேசும் ஒரு சாதாரண தமிழ் பெண், நித்யா சாலமோன்.
https://spiritualsidha.blogspot.com/2021/03/salt-sugar.html
https://ajfstudio1.blogspot.com/2021/03/medical.html
💁 பி .பாண்டு என்றொரு, தென்னகத்து ஜேம்ஸ்
"பாண்டு"
பொதுவாக ஜேம்ஸ் பாண்டு படங்கள் என்றால், அதிரடி திருப்பங்கள் இருக்கும். காதல் நகைச்சுவை, சண்டை, வில்லத்தனம், வீரம், விவேகம் என அனைத்தும் கலந்து கட்டி இருக்கும். அப்படி தான் நம்மூரு பி.பாண்டுவுக்கும் பல திறமைகள் வரிந்து கட்டி நிற்கும். போட்டி போட்டு கொண்டு ஓடிக் கொண்டிருக்கும் இந்த கலையுலகில், நடிப்போடு சேர்த்து பல கலைகளையும், திறமைகளையும் வளர்த்துக் கொண்டு, தன்னை நிலைப் படுத்திக் கொண்டவர் தான் இந்த Comedy Actor பி.பாண்டு.
பி.பாண்டு என்ற நகைச்சுவை நடிகர் இவ்வளவு திறமை பெற்றவரா என கண்டிப்பாக யோசிப்பீர்கள்... இந்த பதிவை முழுவதும் பாருங்கள்.
பொதுவாக மிமிக்ரி செய்யும் அனைவருக்கும், எளிதில் வரும் குரல் தோரணை, நம்ம கட்டுரையின் கதாநாயகன் பாண்டு அவர்களுடையது தான்... காரணம் ஒரே வார்த்தை தான்... |""""ஆங்""|. சற்றும் சிரமமே இல்லாமல், தனது குரல் போல் மிமிக்ரி செய்து, மேடைகளில் அசத்தி வரும் பலருக்கும், வாழ்க்கை கொடுத்தவர் பி.பாண்டு.
இவரது இளமை காலத்தில் இருந்தே, ஓவியம் வரைவது பிடித்து இருந்தது. ஆனாலும், தனது அண்ணன் இடிச்ச புலி செல்வராசு, சினிமாவில் நடித்துக் கொண்டிருந்ததால், சினிமாவில் நுழைவது ஈசியாக இருந்தது. என்ன தான் படங்களில் நடித்தாலும், வரைவது, எழுதுவதில் தான் அதிக ஆர்வம் இருந்தது. படங்களில் நடித்தது போக, மீதி இருந்த நேரத்தில் வரைவதிலும், லோகோவை காமெடியாக சித்தரிப்பதிலும் குறியாக இருந்துள்ளார்.
சிவாஜி கணேசனும், எம்.ஜி.ஆர் அவர்களும் நடித்து புகழின் உச்சத்தில் இருந்த காலக் கட்டத்தில், அவர்களை வைத்து ஒரு கேலி சித்திரத்தை பாண்டு வரைகிறார். எப்படியோ அந்த சித்திரம் எம்.ஜி.ஆர் அவர்களின் பார்வைக்கு போக, உடனே தலைவர், "அழையுங்கள் பாண்டுவை" என்று உத்தரவு போடுகிறார்.
கண்டிப்பாக தன்னை எம்.ஜி.ஆர், அந்த கேலி சித்திரத்திற்காக வெகுவாக பாராட்டுவார் என்று எண்ணி போகிறார். ஆனால், எம்.ஜி.ஆர், கடுமையாக திட்டுகிறார் பாண்டுவை. கணேசன் நம்மை பற்றி என்ன நினைப்பார்? தப்பு இல்லையா? இந்த மாதிரி கேலி சித்திரம் வரையாதே, என கடிந்து அனுப்பி வைத்தார்.
அடுத்த சில நாட்களில், வேறு ஒரு கேலி சித்திரம் வரைந்து, எம்.ஜி.ஆர் அவர்களிடம் பாராட்டை பெறுகிறார் பாண்டு. இப்படி அன்று தொடங்கிய அவரது இந்த ஆர்வம் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்தது. முறைப்படி ஓவியத்தை கற்றுக் கொண்டு ஓவியத்தில் முனவைர் பட்டமும் பெறுகிறார்.
தமிழகத்தில் ஓவியத்தில் முனைவர் பட்டம் (Phd) பெற்ற முதல் ஆள், நம்ம நகைச்சுவை நடிகர் பி.பாண்டு தான் என்று சொன்னால் நீங்கள் நம்புவீர்களா? ஆனால், அது தான் உண்மை. ஆகச்சிறந்த ஓவியங்களை வரைந்து, இன்னமும் பத்திரப்படுத்தி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அதாவது அந்த கட்சியின் கொடியின் நடுவில் அறிஞர் அண்ணா அவர்களின் ஓவியம் இருக்கும். அதை வரைந்து கொடுத்தது நம்முடைய நகைச்சுவை நடிகர் பி.பாண்டு.
இப்படி பல திறமைகளை ஒருங்கே பெற்ற இந்த பி.பாண்டு,1970-ஆம் ஆண்டு "மாணவன்" படத்தில் அறிமுகமாகி பின்னாளில், உள்ளத்தை அள்ளித்தா, காதல் கோட்டை, ஏழையின் சிரிப்பில், வில்லு, மொட்ட சிவா கெட்ட சிவா, உள்ளிட்ட நூற்றுக்கணக்கான படங்களில் நடித்துள்ளார்.
"வெள்ளித்திரையில் மின்னும் பல பிரபலங்களுக்கு, அதையும் தாண்டிய திறமைகள் இருக்கத் தான் செய்கிறது. அதை சரியான நேரத்தில், சரியான இடத்தில், பொருத்திக் கொண்டவர்களுக்கு, உலகம் எப்போதும் சிகப்பு கம்பளம் அமைத்து கொடுக்க தவறியது இல்லை என்பதே உண்மை. இது நகைச்சுவை நடிகர் பி.பாண்டுவுக்கும் பொருந்தும்.
💁 யார் இந்த இயக்குனர் எஸ் பி ஜனநாதன்? பண்பாட்டிற்கும், கலாசாரத்திற்கும் பெயர் பெற்ற, நெற்களஞ்சியம் இருக்கும் புகழ்பெற்ற தஞ்சாவூர் மாவட்டத்த...