Sunday, February 21, 2021

பிப்ரவரி 22-2021-திங்கட்கிழமை , மாசி மாதம் 10-ந்தேதி!

 💁 வரலாற்றில் இன்று!!!

 1997 - டோலி என்ற ஆடு வெற்றிகரமாக க்ளோனிங் முறையில் பிரதி எடுக்கப்பட்டதாக, பிரித்தானிய அறிவியலாளர்கள் அறிவித்தனர்.

 "எந்திரன்" படத்தில் நம் பார்த்து இருப்போம் அல்லவா, ஒரு ரோபோவின் இருந்து மற்றொரு ரோபோவை உருவாக்குவார்களே... அப்படி போன்றது தான் இந்த க்ளோனிங் முறை. ஆனால், இது உயிரினங்களின் ஒரு மரபணுவை எடுத்து, மற்றொரு உயிரியின் வயிற்றில் வைத்து, கரு முட்டையை வளர செய்வதே இந்த Cloning.

 ஸ்காட்லாந்தில் உள்ள கால்  நடை ஆராய்ச்சி நிலையத்தில், ஆராய்ச்சியாளர்களாக இருந்த இயன் வில்மட்  மற்றும் கீத் கேம்பல் இந்த ஒரு முயற்சியை மேற்கொண்டனர். ஒரு செம்மறி ஆட்டை வைத்து இன்னொரு செம்மறி ஆட்டை உருவாக்க முடியுமா? என்பது தான் இவர்களின் கேள்வி. 

அதற்கான முயற்சியில் ஈடுபட்டனர். அப்படி வெற்றிகரமாக உருவாக்கி, அந்த செம்மறி ஆட்டு குட்டிக்கு டோலி என்ற பெயரை சூட்டிஅதனை உலகுக்கு அறிவித்த தினம் இன்று.

 வரலாற்றில் புதிய அத்தியாயத்தை இந்த ஆராய்ச்சி முடிவு ஏற்படுத்தியது. பின்னாளில், தாவரங்களுக்கும் இந்த க்ளோனிங் முறை நகர்ந்து சென்றது எனதும் குறிப்பிடத்தக்கது.

 இது தான் அந்த டோலி என்ற செம்மறியாடு.

1924கால்வின் கூலிஜ் வெள்ளை மாளிகையில் இருந்து வானொலி மூலம் உரையாற்றிய முதலாவது அமெரிக்கத் தலைவர் ஆனார்.

 1958எகிப்தும் சிரியாவும் இணைந்து ஐக்கிய அரபுக் குடியரசை அமைத்தன.

 

 💁  இந்த நாளில் பிறந்து இந்த நாளுக்கு சிறப்பு சேர்த்தவர்:

 1898தில்லையாடி வள்ளியம்மை, இந்திய விடுதலைப் போராட்டப் பெண் போராளி.

இந்தியாவில் சுதந்திர கனல் சூறாவளியாய் சுழன்று கொண்டிருந்த நேரம் அது. அறவழியில் போராடி கொண்டிருந்த காந்திஜி அவர்களுக்கு பக்கபலமாய் பலர் கை கோர்த்து நின்றனர்.

 ஒரு முறை அவர் நடத்திய சத்தியாகிரக போராட்டத்தில், அவரை சுட்டு   வீழ்த்துவதற்காக குறி பார்த்த வெள்ளையன் கையில் துப்பாக்கியை ஏந்தி நிற்க, தன்னுயிரையும் துச்சமென நினைத்து, காந்தி அவர்களுக்கு முன்னாள் வந்து நின்று, அவரை மறைத்துக்கொண்டு, தைரியம் இருந்தால் என்னைச்சுடு. இல்லையேல் திரும்பி பார்க்காமல் ஓடு என்று வெள்ளையனை தெறிக்கவிட்டவர் தான் இந்த தில்லையாடி வள்ளியம்மை.

இந்திய தேச விடுதலை வரலாற்றில், இந்தியாவில் நடைபெறாத, தாய் நாட்டின் சுதந்திரத்துக்காக நிகழாத ஒரு அறப்போராட்டத்தில், தன் உயிரை துச்சமென எண்ணி, மகாத்மா காந்தியடிகளின் உந்துவிசையாக, தென்னாபிரிக்காவில் அடிமைகளாக நடத்தப்பட்ட இந்தியரின் அவல நிலை கண்டு, மனம் கசிந்து அவர்கள் உரிமைக்காக காந்தியடிகள் அறப்போராட்ட அறைகூவல் விடுத்த உலகின் முதல் சத்தியாகிரகப் போரின் நாயகி அன்னை தில்லையாடி வள்ளியம்மை.

அப்படிப்பட்ட மகத்தான வீர மங்கையின் பிறந்த நாளை போற்றுவதில் பெருமை கொள்கிறேன்.

சென்று வாருங்கள் எஸ்.பி.ஜனநாதன்!!!

💁 யார் இந்த இயக்குனர் எஸ் பி ஜனநாதன்? பண்பாட்டிற்கும், கலாசாரத்திற்கும் பெயர் பெற்ற, நெற்களஞ்சியம் இருக்கும் புகழ்பெற்ற தஞ்சாவூர் மாவட்டத்த...