Thursday, February 18, 2021

என்னை பற்றி...

சாதாரண ஏழை விவசாய குடும்பத்தில் பிறந்து, வாழ்க்கையில் போராடி, ஆசிரியாராக தனியார் பள்ளியில் சேர்ந்து, தற்போது பணியை துறந்து, இல்லத்தரசியாக பொறுப்பேற்றுக்கொண்ட ஒரு தமிழ் பெண். 

பிறந்தது என்னவோ விழுப்புரம் மாவட்டம் என்றாலும், அங்கிருந்து தற்போது பிரிந்து போன கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வசிக்கிறேன். கணவர் ஊடகத்தில் வேலை பார்ப்பதால், அவர் வேலை செய்யும் இடத்தில் தற்போது இருக்கிறேன்.

எண்ணத்திலும் எழுத்திலும் எப்பொழுதும் வரலாறும், வரலாற்று நிகழ்வுகளும் , வரலாற்று சம்பவங்களும்  அலைபாய்ந்து கொண்டே இருக்கும். பார்த்ததை, படித்ததை, கேள்விப்பட்டதை என் மாணவர்களுக்கு கூறுவேன். ஆனால், முறைப்படி வலைப்பூ எழுதும் எண்ணம் இத்தனை நாள் வரவில்லை. 

ஆனால் இப்பொழுது எழுத தோன்றுகிறது. நிறைய எழுதினால் வருமானம் வரும் என்றெல்லாம் சொன்னார்கள். வருமானத்திற்காக எழுதவில்லை. என் அறிவை பெருக்கிக் கொள்ளவே எழுதுகிறேன். 

"வரலாற்றில் இன்று" என்ன நிகழ்வுகள் அரங்கேற்றம் ஆகி உள்ளன, இன்றைய தினம் யார் யாரெல்லாம் பிறந்து உள்ளார்கள், இந்த நாளின் சிறப்புக்கள் என்ன? என்பது குறித்து ஒரு தொகுப்பினை தரலாம் என்று எழுத வந்துள்ளேன். 

முடிந்தால் முழுவதும் படியுங்கள். படித்து முடித்து மற்றவர்களுக்கும் பகிருங்கள்.

எண்ணத்தில் உதித்த வரலாற்று சம்பவங்கள், இங்கே இறக்கி வைக்கப்படுகிறது. ஒரு நாளை புத்துணர்ச்சியுடன் தொடங்கும் போது, என் வலைப் பக்கத்தையும் படித்து கொள்ளுங்கள்.  கண்டிப்பாக உங்களுக்கு எங்கேனும் கை  கொடுக்கும். 

"இன்றைய சம்பவங்கள் நாளைய வரலாறு". அந்த வரலாற்றை உருவாக்கி கொண்டிருக்கும் அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

சென்று வாருங்கள் எஸ்.பி.ஜனநாதன்!!!

💁 யார் இந்த இயக்குனர் எஸ் பி ஜனநாதன்? பண்பாட்டிற்கும், கலாசாரத்திற்கும் பெயர் பெற்ற, நெற்களஞ்சியம் இருக்கும் புகழ்பெற்ற தஞ்சாவூர் மாவட்டத்த...