Thursday, March 11, 2021

March 12, 2006. Aus Vs SA History ODI


💁 அடித்து நொறுக்கிய ஆஸ்திரேலியா. திருப்பி அடித்த தென் ஆப்பிரிக்கா.

2006 மார்ச் 12, கிரிக்கெட் ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஆச்சர்யம், அதிர்ச்சி, கலந்த, பரபரப்பான ஒரு நாள். சரித்திர சாதனைகள் படைத்திட்ட ஒரு நாள் இது. அன்று நடந்த இந்த சாதனையை,  எந்த அணியாலும் இன்றளவும் நெருங்க முடியவில்லை. காரணம் அப்படிப்பட்ட ஒரு வரலாற்று சிறப்பு மிக்க சாதனை அது.

மார்ச் 12, தென் ஆப்பிரிக்காவில் உள்ள உலகப்புகழ் பெற்ற இயற்கை எழில் கொஞ்சும் ஜோகன்னஸ்பர்க்கில், ஆஸ்திரேலியா Vs தென் ஆப்பிரிக்க அணிகளுக்கிடையிலான ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஆரம்பம் ஆகிறது. ஒரு பக்கம் வீரர்கள் போட்டிக்கு தயாராகி கொண்டிருந்தனர். மறுபக்கம் பார்வையாளர்கள் சாரை சாரையாக வந்து கொண்டிருந்தனர்.

 

இயற்கை எழில் கொஞ்சும் பின்னணியில் இருக்கும் இந்த ஸ்டேடியத்தில், அதிகபட்சமாக வெறும் 28,000 பேர் மட்டுமே அமர்ந்து போட்டியை கண்டுகளிக்க முடியும். அதனால் அரங்கம் நிரம்பி வழிந்தது. அன்று வந்த ரசிகர்களுக்கு தெரியாது, இந்த மைதானம்  ஒரு வரலாற்று சிறப்புமிக்க, ஒரு நாளை இந்த மைதானம் எழுதப் போகிறது என்று....

 

அப்போதைய ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ரிக்கி பாண்டிங் மற்றும் தென்ஆப்பிரிக்க கேப்டன் ஸ்மித் ஆகியோர் Toss போட வருகிறார்கள்.  ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்ய அறிவிக்கிறார்கள்.

 

எதிர் அணியினரை தன்னுடைய மிடுக்கான பார்வையாலும்,  துறுதுறுப்பான பேட்டிங்காலும் மிரளவைக்கும் ஆடம் கில்கிறிஸ்ட் மற்றும் சைமன் காட்டிச் இருவரும் உள்ளே வருகிறார்கள். வழக்கம் போல ஆடும் தன்னுடைய அதிரடியான ஆட்டத்தை முதல் Ball முதலே ஆரம்பிக்கிறார் கில் கிறிஸ்ட். அதன் பலனாக 44 பந்துகளில் 55 ரன்கள் எடுத்து அவுட்டாகி வெளியேறுகிறார். என்ன ஆச்சரியம் எனில், கில் கிறிஸ்ட் சிக்ஸர் அடிக்காமல் ஒன்பது Four-களை  மட்டும் அடித்து விட்டு சென்றது பலருக்கும் ஆச்சரியம்.

 

முதல் விக்கட் வீழ்த்திய தென்ஆப்பிரிக்க வீரர்கள் மகிழ்ச்சியில் துள்ளி குதிக்கும் பொழுது, அவர்களுக்கு தெரியவில்லை, அடுத்த தலைவலி ரிக்கி பாண்டிங் என்று.... ஆம், கேப்டன் என்ற கூடுதல் பொறுப்போடு உள்ளே வருகிறார் பாண்டிங். முதல் பந்திலேயே விறு விறுவென்று அடிக்க தொடங்குகிறார். அப்போதைய வேகப்பந்து வீச்சாளரான மக்காயா நிதினி, மித வேகப்பந்து வீச்சாளரான ஜாக் காலிஸ் உள்ளிட்ட பந்துவீச்சாளர்களை ஒரு பதம் பார்க்கிறார். எல்லா பந்துகளையும் போர், சிக்ஸர் என தெறிக்க விடுகிறார்... ஒரு கட்டத்தில் "இந்தாளுக்கு கில் கிறிஸ்ட் தேவலாம் போல" என தென் ஆப்பிரிக்க பந்து வீச்சாளர்கள் குமுற தொடங்கினர்.

அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரிக்கி பாண்டிங்,154 நிமிடங்கள் களத்திலிருந்து, 105 பந்துகளை சந்தித்து 164 ரன்களை அடித்து அணியின் ரன் ஜெட் வேகத்தில் உயர அடித்தளம் இடுகிறார் இதில,13 போர்களும் 9 Sixer-ம் அடக்கம்.

 

இமாலய Score ஏறுவதற்கு காரணமான பாண்டிங்கை அவுட்டாக்கியதும், தென் ஆப்பிரிக்க பவுலர்களுக்கு பெரிதாக மகிழ்ச்சி இல்ல. ஆனாலும் ஒரு சின்ன நிம்மதி. ஆனால், இங்கு தான் நாம் கவனிக்க வேண்டும். அடுத்தது இன்னமும் அவர்களுக்கு தெரியவில்லை மைக் ஹசி உள்ளே வருவார் என்று....

 

துள்ளிக் கொண்டு வேக வேகமாக உள்ளே வருகிறார் மைக் ஹசி. நாலாபறங்களிலும் எதிர் அணியின் பந்துகளை  பறக்க விடுகிறார். தன் பங்குக்கு 51 பந்துகளில் 81 ரன்கள் குவித்து திருப்தியாக வெளியே செல்கிறார்.

 

இறுதியாக ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட்டுகளை இழந்து, 50 ஓவர்கள் முடிவில் 434 என்ற ஸ்கொரை பதிவு செய்கிறார்கள். ஒரு கட்டத்தில் ஆஸ்திரேலியா 500 ரன்கள் அடித்து சாதனை படைப்பார்கள் என்று ரசிகர்கள் என்ன தொடங்கினார்... காரணம் அந்த அளவுக்கு அவர்களின் ஆக்ரோஷமான ஆட்டம் இருந்தது.

 

இறுதியாக, வென்றுவிடலாம். இந்த ஸ்கோரை தென்னாப்பிரிக்கா சேஸ் செய்ய முடியாது என்று 100% நம்பிக்கையுடன் பவுலிங் செய்ய வருகிறார்கள் ஆஸ்திரேலியா வீரர்கள். வழக்கம் போல் சிரித்த முகத்துடனும், சத்தம் அடித்த மகிழ்வுடனும் ரிக்கி பாண்டிங் காணப்படுகிறார்.

 

யாரையும் கிள்ளுக்கீரையாக நினைக்க கூடாது என்பதை எடுத்துரைக்கும் வகையில், தென்ஆப்பிரிக்க அணியின் கேப்டன் ஸ்மித் மற்றும் Boeta Dippenaar ஆகியோர் களம் இறங்குகிறார்கள்.. ஆஸ்திரேலியா அணியின் சார்பில், முதல் ஓவரை வீச அன்றைய, அந்த அணிந்த உயரமான வீரர் நாதன் பிராக்கன் தயாராகிறார். மூன்றாவது பந்தில் தென்னாப்பிரிக்கா அணிக்கு அதிர்ச்சி காத்திருக்கிறது. தொடக்க ஆட்டக்காரர்களில் ஒருவரான ஒரு ரன்னில் ஸ்டம்புகள் சிதற வெளியேறுகிறார்.

 

அடுத்தது அந்த அணியின் மூத்த வீரர் கிப்ஸ் களமிறங்குகிறார். முதல் ஓவரிலேயே வந்ததால், ஒரு சின்ன பதட்டம். வெற்றி முனைப்பில் இருந்த ஆஸ்திரேலிய அணிக்கு, அங்குதான் பிரச்சனை ஆரம்பமானது. அடுத்ததாக வந்த தென்ஆப்பிரிக்க அணியின் மூத்த வீரர் கிப்ஸ் ஆஸ்திரேலிய அணியின் பந்து வீச்சாளர்களை ஒரு "கை" பார்க்க தொடங்குகிறார். 42 நிமிடம், காலத்தில் நின்று, 111 பந்துகளை சந்தித்து 175 ரன்கள் அடித்து அவுட் ஆகிறர். அப்போது ஏறக்குறைய தென் ஆப்பிரிக்காவின் வெற்றி உறுதியாக இருந்தது.

 

ஒருபக்கம் நங்கூரம் போல் களத்தில் நிலைத்து நின்று அதிரடி காட்டிய கேப்டன் ஸ்மித், 90 ரன்களுடன் வெளியேறினார்.  இருவரும் சேர்ந்து ஆட்டத்தின் போக்கை மாற்றியது, பின்வரிசைவீரர்களுக்கு வெற்றிக்கு கனியை தொட்டு பறிக்க எளிதாக இருந்தது. நிறைவாக தென்னாப்பிரிக்கா அணி 9 விக்கெட்டுகளை இழந்து, ஒரு பந்தை மீதம் வைத்து 438 ரன்கள் அடித்து கிரிக்கெட் சகாப்தத்தில் ஒரு புதிய அத்தியாயத்தை எழுதுகிறார்கள்.

ஒரு பந்து மீதம் இருக்கும் நிலையில் ஒட்டுமொத்தமாக 100 ஓவர்களில் இரு அணி வீரர்களும் சேர்ந்து 872 ரன்களைக் குவித்து புதிய சாதனை படைத்தனர். ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ரிக்கி பாண்டிங் சிறந்த ஆட்டக்காரருக்கான விருதை பெறுகிறார். 

 

ஒட்டுமொத்தத்தில் இரு அணி வீரர்களுக்கும் இதில் மகிழ்ச்சி. ஒரு வரலாறு எழுதப்படும் பொழுது எப்படி மகிழ்ச்சி அடைகிறோமோ அப்படித்தான் இருவரும் அணி வீரர்கள் களத்தில் நின்று இருந்தனர். ஆனால் இவ்வளவு பெரிய Score-ரை தென்ஆப்பிரிக்க வீரர்கள் கூட்டாக சேர்ந்து Chase செய்து விட்டார்களே என்ற ஆதங்கம், ஒவ்வொரு ஆஸ்திரேலிய அணி ரசிகர்களுக்கும் இன்றளவும் இருக்கத்தான் செய்கிறது.

 

மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர், ஒரு முறை இப்படியாக குறிப்பிடுகிறார். "சாதனைகள் என்பது முறியடிக்க முடியாது என்று சொல்வது முட்டாள்தனம். யாரோ ஒருவர், யாரோ ஒருவரின் சாதனையை முறியடிக்கத் தான் செய்வார்கள். சாதனைகள் நிரந்தரமானது அல்ல. கிரிக்கெட்டைப் பொறுத்தவரை", என்று சொல்லுவார்.

 

அவர் சொல்வதும் சரிதான். ஆனால் 2009ம் ஆண்டு, அதாவது மூன்று வருடங்களுக்குப் பிறகு இலங்கை அணி இந்தியாவை சேஸ் செய்தது. ஆனால், அப்போது 411 ரன்கள் சேர்த்து அடுத்த இடத்திற்கு முன்னேறியது. அன்று முதல் இன்று வரை,  இலங்கை தற்போது இரண்டாம் இடத்தில் இருந்தாலும், இன்றளவும் சாதனைகள் இன்றளவும் எந்த அணியாலும் இதை முறியடிக்க முடியவில்லை.

 

|நாடு கடந்து, மொழி கடந்து, கிரிக்கெட்டை நேசிக்கும் கிரிக்கெட் காதலர்களுக்கு, இந்த சாதனை எப்பொழுதும் மனதில் நிற்கும்|

 

சென்று வாருங்கள் எஸ்.பி.ஜனநாதன்!!!

💁 யார் இந்த இயக்குனர் எஸ் பி ஜனநாதன்? பண்பாட்டிற்கும், கலாசாரத்திற்கும் பெயர் பெற்ற, நெற்களஞ்சியம் இருக்கும் புகழ்பெற்ற தஞ்சாவூர் மாவட்டத்த...