திரைப் பொக்கிஷம் - மூன்றாம் பிறை
கமல்ஹாசன் மற்றும் ஸ்ரீதேவி, சில்க் ஸ்மிதா, காந்திமதி என பெரிய நட்சித்திரங்கள் புடை சூழ இத்திரைப்படம் உருவானது. பல்வேறு சிறப்புக்களை கொண்ட இந்த திரைப்படத்தில் இருந்து சில சுவாரஸ்யமான தகவல்கள் இதோ உங்களுக்காக...
- சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பத்மஸ்ரீ Dr.கமலஹாசனுக்கு பெற்றுத் தந்தது இத்திரைப்படம்.\
- கவியரசர் கண்ணதாசன் பணியாற்றிய கடைசி திரைகாவியம்.
- இத்திரைப்படத்தின் இயக்குனர் பாலுமகேந்திரா, சிறந்த இயக்குனர் என்பதை தாண்டி, சிறந்த ஒளிப்பதிவாளர் என்ற வகையில், அவருக்கு தேசிய விருதை பெற்று தந்தது.
- திரையிட்ட பெரும்பாலான இடங்களில், 300 நாட்களுக்கும் மேலாக ஓடி சரித்திர சாதனை படைத்தது.
- தெலுங்கில் 'வசந்த கோகிலா' எனும் பெயரில் மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளிவந்தது.
👉 "கண்ணே கலைமானே" பாடல் உருவான விதம் :
கண்ணே கலைமானே பாடல் உருவான விதம் குறித்து, இப்படத்தின் இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜா அவர்கள், ஒரு இடத்தில் குறிப்பிட்ட சில விடயங்கள்...
கவியரசர் கண்ணதாசன் போல, உலகத்தில் வேறு யாராலும் அவ்வளவு வேகமாக ஒரு பாடலை எழுதி விட முடியாது. "கண்ணே கலைமானே" பாடல் பதிவு செய்வதற்கு முன்பு, கவியரசர், இயக்குனர் பாலுமகேந்திரா, நான்,ஒரு அறைக்குள் இருக்கிறோம்.
படத்தில் பாடல் எங்கு வருகிறது என்கிற சூழலை, இயக்குனர் அவர்கள் விவரிக்க, நான் ஏற்கனவே போட்டு வைத்த மெட்டிற்கு, ஒரு ஒரு வரிகளாக சொல்லிக்கொண்டே வருகிறார் கவியரசர். அடுத்தடுத்த நிமிடங்களில் இந்த வார்த்தைகள் ஒவ்வொன்றும் அருவியாய் கொட்டுகிறது...
இப்படி நான் வாசிக்க, எனக்கு ஏற்ப அவரும் வரிகளை போட்டுக்கொண்டே வருகிறார். கொஞ்ச நேரத்தில் நிறைவு பெற்றது பாடல். அது தான் நாம் இப்பொழுது கேட்டு ரசிக்கும் கண்ணேகலைமானே என்கிற அற்புதமான காவிய பாடல்...

சிறப்பு..
ReplyDelete