Friday, February 19, 2021

 பிப்ரவரி 20-2021-சனி கிழமை , மாசி மாதம் 8-ந்தேதி!

💁 வரலாற்றில் இன்று!!!

👉 1987 - அசாமில் இருந்து அருணாச்சல பிரதேசம் இந்தியாவின் தனி மாநிலமாக உருவான தினம் இன்று. 

ஆம். தனக்கு பிறந்த குழந்தையை காக்க போராடும் ஒரு தாயை போல இந்தியாவும், மாற்றான் குழந்தையை தனது குழந்தை என தட்டிப்பறிக்கும் மனோபாவத்தில் சீனாவும் இயங்கும் நிலை தான் இந்த அருணாச்சல பிரதேசத்திற்கு தற்போது இருக்கிறது. 

அதன் ஒரு பகுதியாக 1962-ஆம் ஆண்டு இந்திய- சீன போர் மூண்டது. காரணம், இயற்கை எழில் கொஞ்சும் இம்மாநிலத்தின் நிலப்பரப்புகள். இம்மாநிலத்தின் அழகை எடுத்துரைக்கும் 3 முத்தான புகைப்படங்கள். 



இந்த மாநிலத்தை கைப்பற்ற சீன இராணுவம் எவ்வளவோ போராடி வருகிறது. ஆனால், பலம் பொருந்திய இந்திய இராணுவம், கைப்பிடி மண்ணை கூட எடுக்க அனுமதிக்காமல் கெத்து காட்டி வருகிறது. அசாமில் இருந்த இந்த மாநிலம், 1987 ஆம் ஆண்டு இதே நாளில் அதாவது, பிப்ரவரி 20-ந்தேதி தனி மாநிலமாக உருவானது. இதன் தலை நகர் இட்டா நகர்.

திரும்பும் திசை எங்கும் மலையின் வாசம் மட்டுமே தெரிந்த இம்மாநில மக்களுக்கு, கடலின் வாசம் பழக்கமில்லை. ஆம், கடல் பகுதி என்பதே இம்மாநிலத்தில் இல்லை. 

பழங்குடி மக்கள் அதிகம் காணப்படும் இம்மாநிலத்தில், கலாச்சாரம் உலக அளவில் கண்ணை கவரும் வகையில் இருக்கிறது. பார்ப்பதற்கும், தெரிந்து கொள்வதற்கும் இம்மாநிலத்தில் அதிகம் இருக்கிறது. 

இந்தியாவின் பறந்துபட்ட கலாச்சாரத்தை உலகுக்கு எடுத்து உரைக்கும் அற்புதமான மாநிலம் அருணாச்சல் பிரதேசம்.


👉 இன்றைய நாளில் பிறந்த இந்த நாளுக்கு பெருமை சேர்த்தவர் :

👉 1944-பிப்ரவரி 20. விஜய நிர்மலா - தென்னிந்திய திரைப்பட நடிகை, இயக்குனர். அவரை பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்கள். 

  • ஆண் இயக்குனர் களே படங்களை இயக்க போராடும் இன்றைய சூழலில், ஒரு பெண்ணாக நின்று கிட்டத்தட்ட 44 படங்களை இயக்கியுள்ளார்.

  •  2002-ல் அதிக படங்களை இயக்கிய பெண் இயக்குனர் என்ற கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

  • தமிழில் "எங்க வீட்டு பெண்" திரைப்படம் மூலம் அறிமுகம் ஆனார்

  • 44 படங்களை இயக்கியுள்ள விஜய நிர்மலா, 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

  • டித்துக் கொண்டே இருக்கும்போது, "சாட்சி" திரைப்படம் தான் இவருக்கு இயக்குனராகும் விருப்பத்தை  ஏற்படுத்தியது.

தற்போது கலை துறையில் பெண் இயக்குனர்களாக வலம் வரும், லஷ்மி ராமகிருஷ்ணன், சுகாசினி மணிரத்னம், மதுமிதா, சுதா கொங்காரா, கிருத்திகா உதய நிதி, ஹலிதா ஷமின், ஐஸ்வர்யா தனுஷ், ஸ்ரீபிரியா, சவுந்தர்யா ரஜினிகாந்த், போன்றவர்களுக்கும், கலை துறையில் கால் பாதிக்க துடிக்கும் வருங்கால பெண் இயக்குனர்களுக்கும், விஜய நிர்மலா ஆக சிறந்த உதாரணம். 

No comments:

Post a Comment

சென்று வாருங்கள் எஸ்.பி.ஜனநாதன்!!!

💁 யார் இந்த இயக்குனர் எஸ் பி ஜனநாதன்? பண்பாட்டிற்கும், கலாசாரத்திற்கும் பெயர் பெற்ற, நெற்களஞ்சியம் இருக்கும் புகழ்பெற்ற தஞ்சாவூர் மாவட்டத்த...