Wednesday, February 24, 2021

25-02-2021-இன்று கவுதம் வாசுதேவ் மேனன் பிறந்த தினம்.

💁 காதலர்களின்  காதலன் - கவுதம் வாசுதேவ் மேனன்.

காதலின் பொருள் எதுவாயினும் உண்மையில் அன்பின் ஆழமான புரிதலே காதல்... இதை தன்னுடைய படங்களில் மிக அழகாக உள்வாங்கிக்கொண்ட இயக்குனர்களுள் ஒருவர் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன். 


பட்டுக்கோட்டையில் இருக்கும் ஒரு கல்லூரியில் படித்துக் கொண்டிருக் -கும்போது, தற்செயலாக ஒரு  ஆங்கிலப் படத்தை பார்க்கிறார். அந்தப் படம் பார்த்து முடித்த உடன், உள்ளுக்குள் ஏதோ ஒரு ரசவாத மாற்றம் என்கிறார்களே, அது போன்று ஏற்பட்டிருக்கிறது போலும்... அப்பொழுது உதித்ததுதான் இயக்குனர் அவதாரம். 


பின்னாளில், அழகான காதல் படங்களை கொடுத்த இயக்குனர் வரிசையில், முன்னணி இடத்தை தக்க வைத்துக் கொண்டவ இயக்குனர் தான் இந்த கௌதம் வாசுதேவ் மேனன். அவரின் பிறந்த தினம் இன்று. அதாவது பிப்ரவரி 25 1973 ஆம் ஆண்டு பாலக்கோடு மாவட்டத்திலுள்ள ஒட்ட பாலத்தில் பிறந்தார்.... அவரை பற்றிய சில சுவாரஸ்யமான குறிப்புகள்.


கல்லூரிப் பருவத்தில் இயக்குனர் ஆசை துளிர்விட்டது சரிதான். அதை எந்த இயக்குனரிடம் இருந்து ஆரம்பிப்பது என்பதுதான் பெரிய சவால். அப்படி கவுதம் வாசுதேவ் மேனன், உதவி இயக்குனராக வேலை பார்க்க தேர்வு செய்த நபர், ராஜீவ் மேனன். இவரின் இயக்கத்தில்  இயக்கத்தில் வெளிவந்த மின்சார கனவு படத்தில் தான் உதவி இயக்குனராக பணியாற்றினார்.


1997ம் ஆண்டு வெளிவந்த இந்த திரைப்படம், சிறந்த இசையமைப்பாளருக்கான விருதை ஏ ஆர் ரகுமான்-க்கும், சிறந்த நடன இயக்குனர் விருதை பிரபுதேவாவுக்கும், சிறந்த பாடகர் விருதை எஸ் பி பாலசுப்பிரமணியம் அவர்களுக்கும், சிறந்த பெண் பாடகர் விருதை சித்ரா அம்மா அவர்களுக்கும் பெற்றுத்தந்தது. இப்படி முதல் படமே பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி வெற்றிகரமாக முடிந்தது. 


பிறகு சொந்தமாக படத்தை இயக்க ஆரம்பிக்கிறார். 2000 ஆவது வருடத்தில், "உல்லாலா" என்ற தலைப்பில் முதல் படத்தை தொடங்குகிறார். ஆனால் பின்னாளில், அந்த திரைப்படம் "மின்னலே" என்கிற தலைப்பில், வெள்ளித்திரை ரசிகர்களுக்கு மாபெரும் விருந்து படைத்தது. 

  • இந்தப் படத்தில்தான் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் அறிமுகமாகிறார். முதல் படத்திலேயே தரமான பாடல்களை கொடுத்து கவனிக்கவும் செய்தார் ஹாரிஸ் ஜெயராஜ். 


  • பிறகு காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, பச்சைக்கிளி முத்துச்சரம், வாரணம் ஆயிரம், விண்ணைத்தாண்டி வருவாயா, என்னை அறிந்தால், என்னை நோக்கி பாயும் தோட்டா, போன்ற பல முக்கியமான படங்களை கொடுத்தார். 


  • வெற்றிகரமாக படங்களைக் கொடுத்த கௌதம் வாசுதேவ் மேனன் அவர்களை சுற்றி எப்பொழுதும் ஒரு சலசலப்பு இருந்து கொண்டே இருக்கும்... கதாநாயகிகளை காதலிக்கிறார் என்பதே அந்த குற்றசாட்டு. கதைகளை காதலிக்கும் கவுதம் மேனனுக்கு, கதாநாயகிகளை காதலிப்பதில் ஒன்றும் தவறில்லையே.  காதலிப்பவன் மனிதர்களையும் நேசிக்கிறார் என்று எடுத்துக் கொள்வோம்.


  • எது எப்படி இருந்தாலும், தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குனராக தன்னை நிலை நிறுத்திக் கொண்ட கௌதம் வாசுதேவ் மேனன், அவர்கள் இன்னும் பல வெற்றி படங்களை கொடுக்க வேண்டும் என்பதே, இந்த வலையகம் படிக்கும் மனிதர்களின் எண்ணமாக இருக்கும்.



No comments:

Post a Comment

சென்று வாருங்கள் எஸ்.பி.ஜனநாதன்!!!

💁 யார் இந்த இயக்குனர் எஸ் பி ஜனநாதன்? பண்பாட்டிற்கும், கலாசாரத்திற்கும் பெயர் பெற்ற, நெற்களஞ்சியம் இருக்கும் புகழ்பெற்ற தஞ்சாவூர் மாவட்டத்த...