Monday, February 22, 2021

மாடு மேய்த்தவர், இயக்குநரா?

💁 யார் இந்த இயக்குனர் ஆர் வி உதயகுமார்?

கோவை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் தனது தந்தையுடன் மாடு மேய்த்துக் கொண்டிருந்தான் இந்த சிறுவன். பக்கத்தில் ஏதோ கோவில் திருவிழாவில், "ஆயிரம் நிலவே வா" என்ற எம்ஜிஆரின் பாடல் ஓங்கி ஒலித்துக் கொண்டிருந்த நேரம் அது. அட பாடல் அருமையாக இருக்கிறது. யாரோ ஒரு புது குரல் கேட்கிறது என்று அந்த சிறுவன் நினைத்து கொண்டிருந்த போதே, பாடல் முழுவதுமாக ஓடவில்லை. யாரோ நிறுத்தி விட்டார்கள். வேதனை பொங்க அங்கலாய்த்துக் கொண்டே ஆடுகளை மேய்க்க தொடங்கினான் இந்த சிறுவன்.

 காலம் கடந்தது, நாட்கள் நகர்ந்தது. சினிமா இயக்குனர் ஆகும் கனவுகளோடும்ஆசையோடும், சென்னை நகரை நோக்கி படையெடுத்த அந்த ஆடு மேய்த்த இளைஞர் தான் இயக்குனர் ஆர்.வி. உதயகுமார்.

 1990 ஆம் ஆண்டு அவருடைய இயக்கத்தில் உருவான திரைப்படம் தான் ராஜகுமாரன். அந்தப்படத்தின் ஒரு பாடலை தானே எழுதி முடித்து விட்டுஅதை இசையமைப்பாளர் இளையராஜாவிடம் கொடுக்கும்போது, அவரைக் கேட்கிறார், யார் பாட வேண்டும் என்று...

 அதற்கு இவர், எஸ் பி பாலசுப்பிரமணியம் பாடவேண்டும் என்று சொன்னாராம். உடனே இளையராஜா, அவன் அமெரிக்காவில் இருக்கிறான், வருவதற்கு ஒரு மாதம் ஆகும். என்று சொல்ல, உடனே ஆர்.வி உதயகுமார், பரவாயில்லை சார், அது ஒன்றும் பிரச்னை இல்லை. அவர் வரட்டும். அது வரை காத்துக்கிடக்கிறேன் என்று சொல்லி விட்டு கிளம்பி விட்டாராம். பிறகு,

ஒரு மாதம் கழித்து, மீண்டும் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் தாயகம் திரும்பிய போது, தனது பாடல் வரிகளை கொடுத்து, பாடலை பாட கேட்டுக் கொண்டுள்ளார். வரிகளை படித்து விட்டு ஆரத்தழுவி கொண்டாராம் எஸ்.பி.பி. 

மாடு மேய்த்துக் கொண்டிருக்கும் போது, துளியும் யோசித்து இருக்க மாட்டார் ஆர்.வி. உதயக்குமார். தன்னுடைய வரிகளுக்கு எஸ்.பி.பி குரல் கொடுப்பார் என்று... ஆம், அந்தப்பாடல் தான் "என்னவென்று சொல்வதம்மா வஞ்சி அவள் பேரழகை".

 பின்னாளில்,சவுந்தர்யா என்றொரு நளின நடிகை மற்றும் பலரை திரையுலகுக்கு அறிமுகம் செய்து வைத்தவரும் இந்த ஆடு மேய்த்த சிறுவன் தான்.

கனவுகளையும், லட்சியங்களையும் துரத்திய இயக்குனர் ஆர்.வி. உதயக் குமார், பின்னாளில், சின்ன கவுண்டர், எஜமான், கிழக்கு வாசல், பொன்னுமணி, சிங்கார வேலன், நந்தவன தேரு போன்ற அழகான திரைப்படங்களை  ரசிகர்களுக்கு கொடுத்து வெள்ளித்திரையில் விருந்து வைத்த பெரும் பெருமைக்கு சொந்தக்காரர்.

 லட்சியங்களை அடைய, கடுமையாக போராட வேண்டும் என்பதற்கு ஆக சிறந்த உதாரணம் இயக்குனர் ஆர்.வி. உதயகுமார்.


No comments:

Post a Comment

சென்று வாருங்கள் எஸ்.பி.ஜனநாதன்!!!

💁 யார் இந்த இயக்குனர் எஸ் பி ஜனநாதன்? பண்பாட்டிற்கும், கலாசாரத்திற்கும் பெயர் பெற்ற, நெற்களஞ்சியம் இருக்கும் புகழ்பெற்ற தஞ்சாவூர் மாவட்டத்த...