Tuesday, March 2, 2021

மார்ச்சு 3, காட்டு உயிர்கள் தினம்.

 💁 இன்று உலக காட்டு உயிர்கள் தினம். 

ஆங்கிலத்தில் சொல்வதெனறால் "World Wildlife day". உலகில் உள்ள தாவரங்கள் மற்றும் காட்டு விலங்குகள் குறைந்து வருவதை ஒட்டி, ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் 3-ஆம் தேதி, அதாவது இதே நாள், உலகம் முழுவதும் "World Wildlife day" அனுசரிக்கப்படுகிறது. அழிவின் விளிம்பில் இருக்கும் விலங்குகள் மற்றும் தாவரங்களை பாதுகாப்பது என்பதே இந்த நாளின் முக்கிய நோக்கம்.

ஆதி மனிதன் தோன்றின பண்டைய காலம் முதல், இன்று வரை ஆறறிவு கொண்ட மனித இனத்துடன், ஐந்தறிவு கொண்ட உயிரினங்களும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. 


என்னை பொறுத்தவரை அழிவின் விழிம்பில் இருப்பது ஐந்தறிவு விலங்குகள் அல்ல. மாறாக இந்த பூமி நமக்கு மட்டும் தான் என்று சொந்தம் கொண்டாடும் ஆறறிவு கொண்ட மனிதர்கள் தான் அழிவின் விளம்பில் இருக்கிறோம். உயிரினங்களும் தாவர இனங்களும், எதைப்பற்றியும் கவலைப்படாமல், அதன் போக்கில் சென்று கொண்டிருப்பதே அதன் சிறப்பம்சம்... 


சமீபத்தில் கேரளாவில் ஒரு யானையின் வாயில் அண்ணாச்சி பபழத்துக்குள் வெடி மருந்தை வைத்து, யானையைக் கொல்ல வைத்த சம்பவம், உலக அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது என்பதை நாம் மறுக்க முடியாது.

ஆக அழிந்து வரும் விளிம்பு நிலையில் இருக்கும் விலங்கினங்களுள்  மிக முக்கியமானது யானைகள். பொதுவாகவே யானைகள் அதன் வாழ்விடங்களை விடுத்து, சாலைக்கும் வீதிக்கு வருகிறது என்று நாம் பொய் பரப்புரையை சொல்லி வருகிறோம். உண்மையில் நாம் தான் யானைகளின் வாழ்விடத்தை ஆக்கிரமிப்பு செய்து விட்டோம்


இந்த உலகில் நாம் மட்டும் வாழவில்லை. மாறாக கிட்டத்தட்ட 87 லட்சத்திற்கும் மேற்பட்ட உயிரினங்கள் வாழ்ந்து கொண்டு இருக்கின்றது. இவற்றில் பெரும்பாலான உயிரினங்கள், தினம் தினம் அழிவின் விளிம்பில் சிக்கித் தவிக்கிறது. 


காரணம் "புவி வெப்பமயமாதல்" என்று ஏதோ மேம்போக்கான காரணத்தை சொல்லி நாம் தப்பித்துக் கொள்ள முடியாது. உண்மையில் மனிதர்களின் சுயநலம் மட்டுமே விலங்கினங்களும் பறவையினங்களும் தாவர இனங்களும் அழிந்து வருவதற்கு காரணம். 


சில பல ஆண்டுகளுக்கு முன்பு, நம் இந்தியாவில் உள்ள அந்தமான் நிகோபார் தீவுகளில் இருக்கும் ஒரு இடத்தில், அந்த மொழியை பேசத் தெரிந்த கடைசி பெண் இறந்து போகிறார்.  அந்த குறிப்பிட்ட மொழியைப் பேச ஆள் இல்லை. ஒருவர் இறக்கும் பொழுது அவர் மட்டும் இறக்கவில்லை, ஒரு பண்பாட்டின் மொத்த வரலாறும் அழிந்து போகிறது. 


மனிதர்களுக்கு மட்டும் இது பொருந்தாது காட்டு உயிரினங்களுக்கும் பொருந்தும். ஒரு இனம் அழியும் பொழுது, அதன் ஒட்டு மொத்த வரலாறும் பூமியிலிருந்து தீ வைத்து எரிக்கப்பட்ட புல்,பூண்டை போல் அழிந்து போகிறது.


சமீபத்தில் அமேசான் காடுகளில் எத்தனை விலங்கினங்கள், உயிரினங்கள், தாவர இனங்கள், உயிரோடு தீயில் கருகிப் போனது என்பதை கண்கூடாக பார்த்தோம். பார்த்த நமக்கு மனம் பதறிப்போனதல்லவா?

அப்படி இருக்கும்போது காட்டு விலங்குகளை பாதுகாப்பது கடமையும் பொறுப்பும் கூட. கூடுமானவரை காட்டு விலங்குகளை வேட்டையாட, அல்லது அதற்கு தொந்தரவு கொடுக்காமல், அதன் போக்கிலேயே விட்டு விட்டு  நம் பூமிக்கு நாம் ஒரு பக்கம் வாழ்வோம் அவைகள் ஒரு பக்கம் வாழவேண்டும் என்ற நிலைப்பாட்டை புரிந்து கொண்டு, கடந்து சென்றால், நமக்கும் நல்லது, காட்டு விலங்கினங்களுக்கும் நல்லது. 


"நாம் வாழும் பூமி நமக்கு மட்டும் சொந்தமல்ல, என்பதை மனதில் நிறுத்திக் கொள்வோம்!!! அழிவின் விளிம்பில் இருக்கும் உயிரினங்களையும் பாதுகாப்போம்!!!"

No comments:

Post a Comment

சென்று வாருங்கள் எஸ்.பி.ஜனநாதன்!!!

💁 யார் இந்த இயக்குனர் எஸ் பி ஜனநாதன்? பண்பாட்டிற்கும், கலாசாரத்திற்கும் பெயர் பெற்ற, நெற்களஞ்சியம் இருக்கும் புகழ்பெற்ற தஞ்சாவூர் மாவட்டத்த...